இந்தியா-ஆஸ்திரேலியா 4வது டெஸ்ட்: கில் சதம், கோஹ்லி அரை சதம்

இந்தியா-ஆஸ்திரேலியா 4வது டெஸ்ட்: கில் சதம், கோஹ்லி அரை சதம்

1 mins read
ea64b609-b63d-45e2-9afd-4fe02dec6c14
இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட், மூன்றாவது நாள் ஆட்டத்தில் ஷுப்மன் கில், விராத் கோஹ்லி இணை சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தினர். படம்: ராய்ட்டர்ஸ் -

இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே சனிக்கிழமை (மார்ச் 11) நடைபெற்ற நான்காவது டெஸ்ட், மூன்றாவது நாள் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் ஷுப்மன் கில்லும் விராத் கோஹ்லியும் பந்தபடிப்பில் அசத்தினர்.

இதில் குறிப்பாக, டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவது சதம் அடித்து, இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கை உயர்த்தினார் கில். ஆனால், 128 ஓட்டங்களில் அவர் ஆட்டமிழந்தார்.

அவருக்குப் பிறகு களமிறங்கிய கோஹ்லி, அரை சதம் (59 ஓட்டங்கள்) அடித்து களத்தில் உள்ளார். அவருடன் கூட்டு சேர்ந்த ரவீந்திர ஜடேஜா, 16 ஓட்டங்களும் ஆட்டம் இழக்காமல் உள்ளார்.

இந்நிலையில், மூன்றாவது நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 289 ஓட்டங்களை எடுத்துள்ளது. முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 480 ஓட்டங்களை எடுத்தது. எனவே, ஆஸ்திரேலியாவின் ஓட்ட எண்ணிக்கையைத் தொட இந்தியா இன்னும் 191 ஓட்டங்களை எடுக்க வேண்டும்.