இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்: சென்னையில் தலையெழுத்து நிர்ணயிக்கப்படும்

இந்திய-ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை வெல்லப்போவது எந்த அணி என்பதை நிர்ணயிக்கும் ஆட்டம் புதன்கிழமை (மார்ச் 22) சென்னையில் நடைபெறுகிறது.

விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் 117 ஓட்டங்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, இறுதியாட்டத்தில் காலெடுத்துவைக்கும் இந்திய அணிக்குச் சோதனை காத்திருக்கிறது.

கடந்த ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க்கின் வேகப்பந்துவீச்சுக்கு இந்திய வீரர்கள் ஈடுகொடுத்து விளையாட வேண்டும்.

2019க்குப் பிறகு இந்திய அணி ஒருநாள் தொடரில் தோல்வியுற்றதே இல்லை.

நடப்பு ஒருநாள் தொடரின் முதலிரு ஆட்டங்களில் 147 ஓட்டங்களை எடுத்து வலுவான நிலையில் உள்ளார் ஆஸ்திரேலியாவின் மிட்செல் மார்ஷ். அதேபோல முதலிரு ஆட்டங்களில் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளார் ஸ்டார்க்.

சென்னை, எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் இந்திய அணி இதுவரை 13 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளது. அவற்றில் ஏழு ஆட்டங்களில் வென்றும் ஐந்தில் தோல்வியும் கண்டது.

இந்திய அணி கடைசியாக அங்கு விளையாடிய ஐந்து ஆட்டங்களில் மூன்றில் வென்றும் இரண்டில் தோல்வியும் அடைந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!