புதிய மைல்கல்லை எட்டினார் ரோகித் சர்மா

இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணித் தலைவர் ரோகித் சர்மா சனிக்கிழமை (மார்ச் 11) புதியதொரு மைல்கல்லை எட்டினார்.

அனைத்துலகப் போட்டிகளில் 17,000 ஓட்டங்களை எட்டிய ஏழாவது இந்தியப் பந்தடிப்பாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.டோனி, விராத் கோஹ்லி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ள ‘17,000 ஓட்டங்களைக் கடந்தோர்’ பட்டியலில் இப்போது ரோகித் இணைந்துள்ளார்.

ரோகித்தின் ஓட்டங்களில் பெரும்பாலானவை, ஒருநாள் போட்டிகளில் எடுக்கப்பட்டவை. 241 ஒருநாள் ஆட்டங்களில் அவர் 9,782 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

டி20 போட்டிகளைப் பொறுத்தமட்டில், 148 ஆட்டங்களில் 3,853 ஓட்டங்களை அவர் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகள் என வரும்போது, 48 போட்டிகளில் (அகமதாபாத் டெஸ்ட் போட்டிக்கு முன்பு) 3,344 ஓட்டங்களை ரோகித் எடுத்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை ரோகித் 30 முறை சதம் அடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் ஒன்பது முறையும் டி20 போட்டிகளில் நான்கு முறையும் அவர் சதம் அடித்துள்ளார்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட், மூன்றாவது நாள் ஆட்டத்தில் 35 ஓட்டங்களில் ரோகித் ஆட்டமிழந்தார்.

அனைத்துலக கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக ஆக அதிக ஓட்டங்களை எடுத்தோர்:

சச்சின் டெண்டுல்கர் - 664 ஆட்டங்களில் 34,357 ஓட்டங்கள்
விராத் கோஹ்லி - 494 ஆட்டங்களில் 25,047 ஓட்டங்கள்
ராகுல் டிராவிட் - 504 ஆட்டங்களில் 24,064 ஓட்டங்கள்
சௌரவ் கங்குலி - 421 ஆட்டங்களில் 18,433 ஓட்டங்கள்
எம்.எஸ்.டோனி - 535 ஆட்டங்களில் 17,092 ஓட்டங்கள்
ரோகித் சர்மா - 438 ஆட்டங்களில் 17,000 ஓட்டங்கள்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!