தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹாக்கி: இந்திய அணிக்கு மகுடம்

1 mins read
43a8760c-7594-4c5e-881d-27dbdce33518
சென்னையில் மேயர் ராதாகிருஷ்ணன் அரங்கில் நடந்த இறுதிப் போட்டியில் மலேசியாவைத் தோற்கடித்து ஆசிய வெற்றியாளர் கிண்ணத்தைக் கைப்பற்றியதைக் கொண்டாடும் இந்திய அணி. - படம்: ஏஎஃப்பி

சென்னை: ஆசிய வெற்றியாளர் கிண்ண ஹாக்கித் தொடரில் இந்திய அணி வாகை சூடியது.

சென்னையில் நடந்த இத்தொடரின் இறுதிப் போட்டியில் கடும் போராட்டத்திற்குப்பின் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.

ஆட்டத்தின் ஒன்பதாம் நிமிடத்தில் இந்திய அணி முதல் கோலைப் போட்டது.

ஆயினும், அடுத்தடுத்து மூன்று கோல்களை அடித்து மலேசிய அணி 3-1 என முன்னிலைக்குச் சென்றது. இருந்தபோதும், அதன்பின் இந்திய வீரர்கள் எழுச்சியுடன் விளையாடி சாதித்தனர்.

ஆசிய வெற்றியாளர் கிண்ணத்தை இந்திய அணி கைப்பற்றி இருப்பது இது நான்காவது முறை.

குறிப்புச் சொற்கள்