தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் பிஷன் சிங் பேடி காலமானார்

1 mins read
b9ce65bc-bb40-424a-a93d-657bb553cd01
அனைத்துலக ஒருநாள் போட்டிகளில் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் முதல் வெற்றிக்கு முக்கியக் காரணமாய்த் திகழ்ந்தார் பிஷன் சிங் பேடி.  - படம்: ஊடகம்

அமிர்தசரஸ்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளருமான பிஷன் சிங் பேடி காலமானார். அவருக்கு வயது 77.

இந்திய அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 266 விக்கெட்டுகளை வீழ்த்தினார் பேடி. அவர் பத்து ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி, ஏழு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அனைத்துலக ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் முதல் வெற்றிக்கு முக்கியக் காரணமாய்த் திகழ்ந்தார் பேடி.

1975ஆம் ஆண்டு நடந்த உலகக் கிண்ணத் தொடரில், கிழக்கு ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் அவர் 12 ஓவர்களை வீசி, ஆறு ஓட்டங்களை மட்டும் விட்டுக்கொடுத்து, ஒரு விக்கெட்டைச் சாய்த்தார். அவர் எட்டு ‘மெய்டன்’ ஓவர்களைன் வீசியிருந்தார்.

பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகரில் 1946ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி பிறந்த அவர், 1966ஆம் ஆண்டு அனைத்துலக கிரிக்கெட் போட்டிகளில் அடியெடுத்து வைத்தார். 1979ஆம் ஆண்டுவரை இந்தியாவிற்காக அவர் விளையாடினார்.

குறிப்புச் சொற்கள்