முன்னாள் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் காலமானார்

1 mins read
e2b20303-3ccc-4a32-91e4-276dc2a8f691
படம்: டுவிட்டர்/ஐசிசி -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சலீம் துரானி காலமானார். அவருக்கு வயது 88. குஜராத் மாநிலத்தில் அவரது உயிர் பிரிந்தது.

பந்தடிப்பிலும் பந்துவீச்சிலும் திறமையானவரான துரானி இந்திய அணிக்காக 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

இந்திய டெஸ்ட் வீரர்களில் முன்னணி நட்சத்திரமாக விளங்கிய அவர் 75 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதே நேரம் 1,202 ஓட்டங்களையும் அவர் குவித்துள்ளார்.

1961-62 காலகட்டத்தில் இந்திய அணி, இங்கிலாந்து அணியைத் தோற்கடித்து டெஸ்ட் தொடரை வென்றது. அந்த வெற்றிக்கு முக்கியக் காரணம் துரானி.

அக்காலகட்டத்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் பிரபலமாக இருந்தார் துரானி.

அவரது மறைவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, விளையாட்டாளர்கள் ரவி சாஸ்திரி, யுவராஜ் சிங் உள்ளிட்ட பல பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்