புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர்களான வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல் மூவரும் பூரி ஜகந்நாதர் கோயிலுக்குச் சென்று வழிபட்டதாக பல இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஞாயிற்றுக்கிழமையன்று (பிப்ரவரி 9) நடைபெறவுள்ள இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாம் ஒருநாள் போட்டிக்கு முன்பு மூவரும் அக்கோயிலுக்குச் சென்றனர்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அவர்கள் பூரி ஜகந்நாதர் கோயிலுக்குச் சென்றனர். பிரார்த்தனைக்குப் பிறகு மூவரும் புவனேஸ்வர் நகருக்குத் திரும்பியதாக நியூஸ்18 ஊடகம் தெரிவித்தது. அந்நகரில்தான் இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான ஆட்டம் நடைபெறும்.
நாக்பூரின் விசிஏ விளையாட்டரங்கில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா, நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்விகண்டது. நட்சத்திரப் பந்தடிப்பாளர் விராத் கோஹ்லி காயமுற்றதால் ஹஷஸ்வி ஜைஸ்வல் அணியில் இடம்பெற்றார்.
அதேவேளை, அர்ஷ்தீப் சிங்கை விளையாடுவதற்குப் பதிலாக ஹர்ஷித் ரானா முதன்முறையாக இந்தியுாவுக்குக் களமிறங்கினார்.

