ஹாங்காங்: ஆசியாவின் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவால் இந்தோனீசியாவை வெற்றி காண முடியவில்லை.
ஜகார்த்தாவில் நடைபெற்ற அந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி சமநிலையில் முடிந்தது. ‘சி’ பிரிவில் ஏற்கெனவே நடந்த பஹ்ரேன் உடனான ஆட்டத்தில் 1-0 எனும் கோல் கணக்கில் ஆஸ்திரேலியா தோல்வியுற்றது. அதிலிருந்து மீண்டெழ முற்பட்ட அந்த அணியால் இந்தோனீசியாவை தோற்கடிக்க முடியவில்லை.
உலகக் கிண்ணத் தகுதிச்சுற்றில் இதர ஆட்டங்களில் சீனாவை 2-1 எனும் கோல் கணக்கில் சவூதி அரேபியா வீழ்த்தியது.
ஓமானை 3-1 எனும் கோல் கணக்கில் தென்கொரியா வீழ்த்தியது. பஹ்ரேனை 5-0 எனும் கோல் கணக்கில் ஜப்பான் அபார வெற்றி கண்டது.

