ஜகார்த்தா: இந்தோனீசிய பொது விருது பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது.
இதில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் நஜோமி ஒகுஹரா உடன் மோதினார்.
இதில் பிவி சிந்து முதல் செட்டை 22-20 எனும் புள்ளிக்கணக்கில் வென்றார். 2வது செட்டை நஜோமி 23-21 எனும் புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை பி.வி.சிந்து 21-15 எனும் புள்ளிக்கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

