ஈரோடு: லாட்வியா நாட்டின் ரீகா நகரில் நடந்த 13வது ரீகா டெக்னிகல் யூனிவர்சிட்டி அனைத்துலக சதுரங்கப் போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஈரோட்டைச் சேர்ந்த ப.இனியன் பங்கேற்றார்.
ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல், 11ஆம் தேதி வரை நடைபெற்ற இந்தப் போட்டியில், 24 நாடுகளில் இருந்து 240 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 11 சுற்றுகளாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இனியன் 10 புள்ளிகளைப் பெற்று பிளிட்ஸ் பிரிவில் வெற்றியாளர் பட்டம் வென்றார்.