ஆரவாரத்துடன் தொடங்கும் இந்திய பிரிமியர் லீக்கின் 16ஆவது தொடர்

ஆரவாரத்துடன் தொடங்கும் இந்திய பிரிமியர் லீக்கின் 16ஆவது தொடர்

1 mins read
b3ecc259-83a9-41b3-87fd-7d21d0958964
படம்: ஐபிஎல்/டுவிட்டர் -

இந்திய பிரிமியர் லீக்கின் 16ஆவது தொடர் வெள்ளிக்கிழமை (மார்ச் 31) தொடங்குகிறது.

கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் நீடிக்கும் இந்த தொடர் உலகில் உள்ள பல நாட்டு கிரிக்கெட் ரசிகர்களால் பார்க்கப்படும்.

மொத்தம் 10 அணிகள், 70 பிரிவுச் சுற்று ஆட்டங்கள், மூன்று பிளே ஆப் ஆட்டங்கள் மற்றும் இறுதிப்போட்டி இத்தொடரில் நடக்கிறது.

முதல் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நடப்பு வெற்றியாளரான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.

குஜராத் அணியை ஹார்திக் பாண்டியா வழிநடத்துகிறார்.

போட்டி அகமதாபாத்தில் நடக்கிறது.

சிங்கப்பூர் நேரப்படி இரவு 10 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக தொடக்க நிகழ்ச்சி நடக்கவுள்ளது.

ராஷ்மிகா மந்தனா, தமன்னா பாட்டியா, அர்ஜீத் சிங் போன்ற சினிமா நட்சத்திரங்கள் தொடக்க நிகழ்ச்சியில் ஆடல் பாடல் போன்ற படைப்புகளை நிகழ்த்தவுள்ளனர்.

முதல் போட்டிக்கான நுழைவுச்சீட்டுகள் ஏறக்குறைய விற்றுத் தீர்ந்துவிட்டன என்றும் ஆட்டத்தைக் காண கிட்டத்தட்ட 100,000 ரசிகர்கள் விளையாட்டு அரங்கில் கூடுவார்கள் என்றும் ஊடகங்கள் குறிப்பிட்டன.

குறிப்புச் சொற்கள்