ஐபிஎல்; பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத் தகுதி

ஐபிஎல்; பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத் தகுதி

1 mins read
54f31d89-e030-4915-8572-0c540ed0509d
படம்: டுவிட்டர்/ஐபிஎல் -

ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரிமியர் லீக் தொடர் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்க கடுமையான போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. அந்த அணி 13 ஆட்டங்களில் விளையாடி 18 புள்ளிகளைக் குவித்துள்ளது.

திங்கட்கிழமை இரவு அகமதாபத்தில் நடந்த ஆட்டத்தில் குஜராத் அணியும் ஹைதராபாத் அணியும் மோதின.

முதலில் பந்தடித்த குஜராத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 188 ஓட்டங்கள் குவித்தது.

தொ‌டக்க ஆட்டகாரர் ஷுப்மன் கில் 58 பந்தில் 101 ஓட்டங்கள் குவித்தார்.

ஹைதராபாத் அணியின் புவனே‌ஷ் குமார் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இலக்கை விரட்டிய ஹைதராபாத் அணிக்கு முகமது ‌‌ஷமி, மோகித் சர்மா முட்டுக்கட்டையாக இருந்தனர். இரண்டு பந்துவீச்சாளர்களும் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி எதிரணியின் ஓட்டங்களை கட்டுப்படுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

இறுதியில் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 154 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

பிளே ஆஃப்பில் உள்ள மற்ற மூன்று இடங்களை பிடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், லக்னோ, பஞ்சாப், பெங்களூரு அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்