தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐபிஎல் 2023 தொடக்க நிகழ்ச்சியில் கலக்கவுள்ள சினிமா பிரபலங்கள்

1 mins read
db211a63-a9e4-42d5-9772-606ccd8f8597
படம்: சென்னை சூப்பர் கிங்ஸ் / டுவிட்டர் -

இந்திய பிரிமீயர் லீக்கின் 16ஆவது தொடர் மார்ச் 31ஆம் தேதி தொடங்குகிறது.

முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நடப்பு வெற்றியாளரான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.

போட்டி அகமதாபாத்தில் நடக்கிறது.

இரவு 7:30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக தொடக்க நிகழ்ச்சி நடக்கவுள்ளது.

ராஷ்மிகா மந்தனா, தமன்னா பாட்டியா, கத்ரீனா கைஃப், டைகர் ‌ஷ்ரோஃப், அர்ஜீத் சிங் போன்ற சினிமா நட்சத்திரங்கள் தொடக்க நிகழ்ச்சியில் ஆடல் பாடல் போன்ற படைப்புகளை நிகழ்த்தவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

முதல் போட்டிக்கான நுழைவுச்சீட்டுகள் ஏறக்குறைய விற்றுத் தீர்ந்துவிட்டன என்றும் ஆட்டத்தைக் காண கிட்டத்தட்ட 100,000 ரசிகர்கள் விளையாட்டு அரங்கில் கூடுவார்கள் என்றும் ஊடகங்கள் குறிப்பிட்டன.

குறிப்புச் சொற்கள்