தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐபிஎல் போட்டியில் முக்கிய விதிமுறை மாற்றம்

1 mins read
829ddcc1-3c85-47aa-ba2d-fd70befaecdc
படம்: ஐபிஎல்/டுவிட்டர் -

இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியில் சில விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன.

முக்கியமான விதிமுறையாக, அணித் தலைவர்கள் பூவா தலையா போட்ட பிறகு தங்களது அணி வீரர்களை அறிவித்தால் போதும்.

இதற்கு முன்னர் பூவா தலையா போடுவதற்கு முன்னரே ஆட்டத்தில் விளையாடும் வீரர்கள் விவரங்களை அணித் தலைவர்கள் வெளியிடுவார்கள்.

தற்போது விதிமுறை மாற்றப்பட்டுள்ளதால் அணிகளால் சூழ்நிலைக்கு ஏற்ப சிறந்த 11 வீரர்களை விளையாட வைக்கமுடியும்.

அண்மை ஆண்டுகளாக பூவா தலையாவில் வெற்றிபெறும் அணிக்கு கூடுதல் வெற்றி வாய்ப்புகள் அமைவதால் இப்போது விதிமுறை மாற்றப்பட்டுள்ளது.

மற்ற விதிமுறை மாற்றங்கள்:

குறித்த நேரத்திற்குள் பந்துவீச்சை முடிக்கத் தவறினால், மீதமுள்ள ஒவ்வோர் ஓவருக்கும் 4 வீரர்கள் மட்டும் தான் எல்லைக்கோட்டுக்கு அருகில் நிற்க அனுமதிக்கப்படுவர்.

களக்காப்பாளர்கள் தேவையில்லாமல் நகர்ந்தால் எதிரணிக்குக் கூடுதலாக 5 ஓட்டங்கள் சேரும்.

குறிப்புச் சொற்கள்