தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐபிஎல் 2023லிருந்து முன்னணி நட்சத்திரங்கள் விலகல்

1 mins read
15f124be-ad85-49cf-a832-9b4a10e81688
2022 ஜூன் 29ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் இறுதியாட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் குழுவினருடன் ஹார்திக் பாண்டியா. படம்: IANS -

இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட்டின் 16வது தொடர் மார்ச் 31ஆம் தேதி தொடங்கவுள்ளது.

முதலாட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.

ஒருபக்கம் ரசிகர்கள் போட்டியைக் காண ஆர்வமாக இருந்தாலும் சில முன்னணி விளையாட்டாளர்கள் தொடரில் இருந்து விலகியது வருத்தம் தருவதாக சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

வீரர்கள் விவரம்:

மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர்கள் ஜஸ்பிரீத் பும்ரா, ஜை ரிச்சர்ட்சன் காயத்தில் இருந்து குணமாகவில்லை.

டெல்லி அணியின் தலைவர் ரி‌‌ஷப் பன்ட் சாலை விபத்தில் சிக்கியதால் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

சென்னை அணியின் கைல் ஜேமிசன் காயம் காரணமாக விலகல்

ராஜஸ்தான் அணியின் பிரசித் கிரு‌ஷ்ணா காயம் காரணமாக விலகல்

பெங்களூரு அணியின் வில் ஜாக்ஸ் காயம் காரணமாக விலகல்

தொடரில் கலந்துகொள்வது உறுதியாகாத வீரர்கள்:

கோல்கத்தா அணித் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் (முதுகுவலி) டெல்லி பந்துவீச்சாளர் ஆன்ரிச் நோர்க்கியா பஞ்சாப் அணியின் ஜானி பேர்ஸ்டோ