ஷுப்மன் கில்லுக்கு அபராதம்

1 mins read
5fba50f7-125e-4984-8a11-e726eb8a40fd
ஹார்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறியதால் நடப்பு ஐபிஎல் பருவத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார் இந்திய அணியின் இளம் வீரர் ஷுப்மன் கில். - படம்: ஏஎஃப்பி

சென்னை: இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 அணிகளில் ஒன்றான குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைவர் ஷுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் (S$19,400) அபராதம் விதிக்கப்பட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக செவ்வாய்க்கிழமை (மார்ச் 26) இரவு நடந்த போட்டியின்போது குஜராத் அணி பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதே அதற்குக் காரணம்.

இதன் காரணமாக சென்னை அணி பந்தடித்தபோது 20ஆவது ஓவரில் குஜராத் அணியில் ஐந்து வீரர்களுக்குப் பதிலாக நான்கு வீரர்களை மட்டுமே 30 யார்டு வட்டத்திற்கு வெளியே களக்காப்பில் ஈடுபட அனுமதிக்கப்பட்டது.

இந்தப் போட்டியில் குஜராத் அணி 63 ஓட்ட வித்தியாசத்தில் தோற்றுப்போனது. முதலில் பந்தடித்த சென்னை அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 206 ஓட்டங்களை எடுத்தது. அதன்பின் பந்தடித்த குஜராத் அணி 30 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 143 ஓட்டங்களை மட்டும் எடுத்து தோற்றது.

முன்னதாக, குஜராத் அணி தனது முதல் போட்டியில் மும்பை அணியை ஆறு ஓட்ட வித்தியாசத்தில் வென்றிருந்தது.

குறிப்புச் சொற்கள்