ஐபிஎல் 2025: முதலிடத்தைக் குறிவைக்கும் குஜராத்

1 mins read
1d89ed2e-772b-4dc8-8a39-9a69a90fabf5
டெல்லிக்கு இது முக்கியமான ஆட்டமாகும். தோற்றால் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறுவதில் சிக்கலை எதிர்நோக்கும்.  - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி.

முதல் நான்கு இடங்களைப் பிடிக்க ஐந்து அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நடக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை (மே 18) இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன.

முதல் ஆட்டம் ஜெய்ப்பூரில் நடக்கிறது. அதில் ராஜஸ்தான் ராயலஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி மாலை 6 மணிக்கு நடக்கிறது.

இந்த ஆட்டத்தில் பஞ்சாப் வெற்றிபெற்றால் அதன் பிளே ஆஃப் சுற்றுக் கனவு கிட்டத்தட்ட நிறைவேறும்.

இரண்டாவது ஆட்டம் டெல்லியில் நடக்கிறது. அதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் குஜராத் அணியும் விளையாடுகின்றன.

ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி இரவு 10 மணிக்கு நடக்கிறது.

டெல்லிக்கு இது முக்கியமான ஆட்டமாகும். தோற்றால் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறுவதில் சிக்கலை எதிர்நோக்கும்.

குஜராத் வெற்றிபெற்றால் அது பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறும்.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி ஒன்பது நாள்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றம் அதிகரித்ததால் மே 8ஆம் தேதி பஞ்சாப்-டெல்லி அணிகள் விளையாடிய ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது.

இந்நிலையில், சனிக்கிழமை (மே 17) இரவு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதித் தொடரை மீண்டும் தொடக்கிவைத்தன.

குறிப்புச் சொற்கள்