தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐபிஎல்: தாய்நாடு திரும்பிய குஜராத் அணியின் நட்சத்திர வீரர்

1 mins read
166e8d89-dd30-4cfb-bf5e-3d2edd376681
குஜராத் டைட்டன்ஸ் அணி வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா தமது தாய்நாடான தென்னாப்பிரிக்காவிற்குத் திரும்பியுள்ளார். - படம்: ஏஎஃப்பி

அகமதாபாத்: இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் போட்டிகள் நடந்துவரும் நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிவரும் தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா தனிப்பட்ட காரணங்களுக்காகத் தாய்நாடு திரும்பியுள்ளார்.

“முக்கியமான தனிப்பட்ட விவகாரத்திற்காக ககிசோ ரபாடா தென்னாப்பிரிக்காவிற்குத் திரும்பியுள்ளார்,” என்று குஜராத் அணி நிர்வாகம் வியாழக்கிழமை (ஏப்ரல் 3) ஓர் அறிக்கை வழியாகத் தெரிவித்தது.

என்ன காரணத்திற்காக அவர் சென்றுள்ளார், எப்போது திரும்புவார் என்ற விவரங்கள் அதில் இடம்பெறவில்லை.

இப்பருவத்தில் குஜராத் அணி பங்கேற்ற முதல் இரு போட்டிகளில் ரபாடா விளையாடினார். பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு எதிரான அப்போட்டிகளில் அவர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிராக புதன்கிழமை (ஏப்ரல் 2) நடந்த போட்டியில் அவர் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாகக் களமிறக்கப்பட்ட அர்ஷத் கான், விராத் கோஹ்லியின் விக்கெட்டைக் கைப்பற்றி வியக்க வைத்தார்.

அடுத்ததாக ஏப்ரல் 6ஆம் தேதி சன்ரைசர் ஹைதராபாத் அணியையும் ஏப்ரல் 9ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியையும் குஜராத் அணி எதிர்த்தாடவிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்