தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐபிஎல்: டெல்லி அணித்தலைவராக அக்சர் பட்டேல் நியமனம்

1 mins read
6d24d2b4-0fcd-45d5-9585-9972b23e9be4
ஐபிஎல் போட்டிகளில் கடந்த 2019ஆம் ஆண்டுமுதல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடிவருகிறார் அக்சர் பட்டேல். - படம்: பிசிசிஐ

புதுடெல்லி: இம்மாதம் 22ஆம் தேதி தொடங்கவுள்ள இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் போட்டிகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்குத் தலைமையேற்க இருக்கிறார் இந்திய அணி வீரர் அக்சர் பட்டேல்.

கடந்த பருவங்களில் மற்ற ஐபிஎல் அணிகளின் தலைவராகச் செயல்பட்ட கே.எல். ராகுல், ஃபாஃப் டு பிளஸ்ஸி என இரு மூத்த வீரர்கள் இருக்கும் நிலையிலும் அக்சருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார் 31 வயதான அக்சர். இவ்வாண்டுத் தொடக்கத்தில் இந்திய டி20 கிரிக்கெட் அணியின் துணைத் தலைவராக அவர் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“டெல்லி அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது எனக்குக் கிடைத்துள்ள கௌரவம். என்மீது நம்பிக்கை வைத்துள்ள அணி உரிமையாளர்களுக்கும் அணியின் மற்ற ஊழியர்களுக்கும் மிகுந்த நன்றிக்கடன் பட்டுள்ளேன்,” என்று அக்சர் தெரிவித்துள்ளார்.

சென்றமுறை டெல்லி அணியின் தலைவராகச் செயல்பட்ட ரிஷப் பன்ட், இம்முறை லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிக்கு மாறிவிட்டார்.

குறிப்புச் சொற்கள்