தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐபிஎல்: கோல்கத்தா அணித்தலைவராக ரகானே நியமனம்

1 mins read
fc8457b8-5c1a-41c9-8aca-45d9c1264ad8
அஜிங்கிய ரகானே. - படம்: இந்திய ஊடகம்

கோல்கத்தா: இம்மாதம் தொடங்கவுள்ள இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவராக அஜிங்கிய ரகானே நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த பருவத்தில் அவ்வணித் தலைவராகச் செயல்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர், பஞ்சாப் கிங்ஸ் அணிக்குத் தலைமைப் பொறுப்பேற்கிறார்.

இதனையடுத்து, 36 வயது ரகானேவை புதிய தலைவராகக் கோல்கத்தா அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் அவ்வணியின் துணைத் தலைவராகச் செயல்படுவார்.

இதனையடுத்து, ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான அணிகளுள் ஒன்றான கோல்கத்தா அணிக்குத் தலைமையேற்று வழிநடத்தவிருப்பதைத் தனக்குக் கிடைத்த பெரும்பேறாகக் கருதுகிறார் ரகானே.

“சிறப்பான, சரிவிகிதத்துடன் கூடிய அணியை நாங்கள் கொண்டுள்ளதாக நினைக்கிறேன். அனைவருடனும் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன். பட்டத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் சவாலை ஏற்கிறேன்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் அணிகளுள் இன்னும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மட்டுமே தலைவர் யார் என்பதை அறிவிக்கவில்லை. சென்ற முறை அவ்வணிக்குத் தலைவராக இருந்த ரிஷப் பன்ட் இம்முறை லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.

மார்ச் 22ஆம் தேதி நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் நடப்பு வெற்றியாளரான கோல்கத்தா அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்தாடவுள்ளது.

குறிப்புச் சொற்கள்