தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இரும்பு மனிதர் போட்டி: 80 வயது மூதாட்டி சாதனை

1 mins read
d404d685-7f25-4d16-9b85-ebf79c17d0d7
திருவாட்டி நெட்டேலி கிரபாவ் (நடுவில்) 3.8 கிலோ மீட்டர் நீச்சல், 180 கிலோ மீட்டர் மிதிவண்டிப் போட்டி, 42 கிலோ மீட்டர் ஓட்டம் ஆகியவற்றை 16 மணி நேரம், 45 நிமிடங்கள், 26 வினாடிகளில் முடித்தார். - படம்: எக்ஸ் தளம்

கோனா: உலக இரும்புமனிதர் வெற்றியாளர் போட்டியை அமெரிக்கரான 80 வயது நெட்டேலி கிரபாவ் வெற்றிகரமாக முடித்து சாதனை படைத்துள்ளார்.

இப்போட்டியை முழுமையாக முடித்த ஆக மூத்த பெண்மணி எனும் பெருமை இவரைச் சேரும்.

ஹவாயியின் கோனா பகுதியில் இப்போட்டி சனிக்கிழமை (அக்டோபர் 11) நிறைவடைந்தது.

திருவாட்டி கிரபாவ் 3.8 கிலோ மீட்டர் நீச்சல், 180 கிலோ மீட்டர் மிதிவண்டிப் போட்டி, 42 கிலோ மீட்டர் ஓட்டம் ஆகியவற்றை 16 மணி நேரம், 45 நிமிடங்கள், 26 வினாடிகளில் முடித்தார்.

80 வயதுக்கும் 84 வயதுக்கும் இடைப்பட்டோருக்கான பிரிவில் திருவாட்டி கிரபாவ் முதலிடம் பிடித்தார்.

இந்தப் போட்டியில் திருவாட்டி கிரபாவ் பங்கெடுப்பது இதுவே பத்தாவது முறை.

திருவாட்டி கிரபாவ் தமது 60களில் நெடுமுப்போட்டியில் போட்டியிடத் தொடங்கினார்.

இரும்பு மனிதர் மேரிலேண்ட் போட்டியின் 75 வயதுக்கும் 79 வயதுக்கும் இடைப்பட்டோருக்கான பிரிவை வெற்றிகரமாக முடித்து இவ்வாண்டின் உலக இரும்புமனிதர் போட்டிக்கு அவர் தகுதி பெற்றார்.

குறிப்புச் சொற்கள்