தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

700 விக்கெட் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர்

1 mins read
3f44be10-f2ab-466d-a4ee-d8c4bddf7ac2
700 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஜேம்ஸ் ஆண்டர்சனைப் பாராட்டும் சக இங்கிலாந்து வீரர்கள். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

தர்மசாலா: அனைத்துலக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 700 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற இமாலய சாதனையைப் படைத்துள்ளார் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன், 41.

இந்தியாவிற்கு எதிரான கடைசி, ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் குல்தீப் யாதவின் விக்கெட்டை வீழ்த்தியதன்மூலம் அவர் இந்த மைல்கல்லை எட்டினார்.

முதல் இன்னிங்சில் ஆண்டர்சன் இரண்டு விக்கெட்டுகளைச் சாய்த்தார். இது அவருக்கு 187ஆவது டெஸ்ட் போட்டி.

டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 700 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் ஆண்டர்சன் பெற்றார். இலங்கையின் முத்தையா முரளிதரன் (800 விக்கெட்), ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன் (708) இருவரும் முதலிரு இடங்களில் உள்ளனர்.

இன்னோர் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட் 604 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளார். அவர் 2023 ஜூலையில் ஓய்வுபெற்றுவிட்டார்.

ஆண்டர்சன், பிராட் மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளுக்குமேல் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்கள்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத் 563 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளார். அவரது சாதனையை ஆண்டர்சன் 2018ஆம் ஆண்டு முறியடித்தார்.

குறிப்புச் சொற்கள்