மிர்சஸ் நேஷன்ஸ் கிண்ண வலைப்பந்துப் போட்டிக்கான இறுதி ஆட்டம் செப்டம்பர் 7ஆம் தேதி மாலை சிங்கப்பூரில் உள்ள ஓசிபிசி அரீனாவில் நடைபெற்றது.
ஆட்டத்தை நேரில் காண ஏறத்தாழ 1,280 பேர் திரண்டனர்.
இறுதி ஆட்டத்தில் சிங்கப்பூர் அணியை 61 -33 எனும் புள்ளிக் கணக்கில் உலகத் தரவரிசையில் 30வது இடத்தில் உள்ள கென்யா வீழ்த்தி கிண்ணத்தை வென்றது.
இதுவே கென்யா மகளிர் அணி வென்றுள்ள முதல் அனைத்துலகக் கிண்ணம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்டத்தின் துவக்கத்திலிருந்து கென்யா ஆதிக்கம் செலுத்தியது.
இடைவேளையின்போது அது 30-20 எனும் புள்ளிக் கணக்கில் முன்னிலை வகித்தது.
வெற்றிக்கு கென்யா அணியினர் மேற்கொண்ட கடுமையான பயிற்சிதான் காரணம் என்று அவர்களது பயிற்றுவிப்பாளர் அலி முகிஷா கூறினார்.
இதற்கிடையே, மூன்றாவது இடத்தை நிர்ணயிக்கும் ஆட்டத்தில் அயர்லாந்தை 52-46 எனும் புள்ளிக் கணக்கில் ஐக்கிய அரபு சிற்றரசுகள் வீழ்த்தியது.
தொடர்புடைய செய்திகள்
மற்றோர் ஆட்டத்தில் கனடாவை 61-38 எனும் புள்ளிக் கணக்கில் சிங்கப்பூர் ‘ஏ’ அணி தோற்கடித்து ஐந்தாவது இடத்தைப் பிடித்தது.

