தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கெவின் டி பிரய்ன இடத்தை நிரப்புவது கடினம்: கார்டியோலா

1 mins read
c28af9ef-9129-40fc-a70d-ce7c396f32d2
பெல்ஜியத்தைச் சேர்ந்த கெவின் டி பிரய்ன 2015ஆம் ஆண்டு சிட்டியில் இணைந்தார். - படம்: ராய்ட்டர்ஸ்

மான்செஸ்டர்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் முன்னணிக் குழுவாக உள்ளது மான்செஸ்டர் சிட்டி.

அக்குழுவின் முதுகெலும்பாகத் திகழ்கிறார் முன்கள ஆட்டக்காரர் கெவின் டி பிரய்ன. 33 வயதான பிரய்ன கடந்த 10 ஆண்டுகளாகச் சிட்டிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில், பிரய்ன இப்பருவத்துடன் சிட்டியைவிட்டு விலகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரய்னவின் ஒப்பந்த நீட்டிப்பு தொடர்பில் இன்னும் தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இதற்கிடையே, பிரய்ன குறித்து சிட்டியின் நிர்வாகி பெப் கார்டியோலா உணர்ச்சி பொங்க பேசியுள்ளார்.

“பிரய்ன இடத்தை நிரப்புவது என்பது கிட்டத்தட்ட முடியாத ஒன்று. அவருக்கு மட்டும் 23 வயதாக இருந்திருந்தால் இன்னும் 10 ஆண்டுகள் சிட்டிக்காக ஒப்பந்தம் செய்திருப்பேன்,” என்றார் கார்டியோலா.

பிரய்ன போன்ற வீரர்களின் பெயர் சிட்டியின் வரலாற்றில் எப்போதும் நிலைத்து இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

பெல்ஜியத்தைச் சேர்ந்த பிரய்ன 2015ஆம் ஆண்டு சிட்டியில் இணைந்தார். அதிலிருந்து இதுவரை ஆறு இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் கிண்ணங்கள் உட்பட 13 கிண்ணங்களைச் சிட்டி வென்றுள்ளது.

குறிப்புச் சொற்கள்