போபால்: 68வது தேசிய துப்பாக்கிச் சுடுதல் வெற்றியாளர் போட்டி டெல்லியில் உள்ள போபாலில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 10 மீட்டர் ‘ஏர் ரைபிள்’ பிரிவு இறுதிப் போட்டியில் கிரண் அங்குஷ் ஜாதவ் 252.1 புள்ளிகளைப் பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.
ஒலிம்பிக் போட்டியாளரான அர்ஜூன் பபுதா 251.4 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும் ஜஸ்வரி பிரதாப் சிங் தோமர் 229.8 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.
ஆடவருக்கான ஜூனியர் 10 மீட்டர் ‘ஏர் ரைபிள்’ பிரிவில் குஜராத்தைச் சேர்ந்த முகமது முர்தஸா வானியா 254.3 புள்ளிகளைக் குவித்து தங்கப் பதக்கம் வென்றார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அபினவ் ஷா 251.6 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும், ஓங்கர் விகாஸ் வாகமரே 230.1 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.

