தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடைசி ஓவர் கடைசி பந்தில் கோல்கத்தா அணி வெற்றி

1 mins read
2603bd81-7894-48c8-bf41-59e7565c3d05
படம்: டுவிட்டர்/ஐபிஎல் -

கடினமான இலக்கை கடைசி பந்து வரை போராடி கோல்கத்தா அணி வெற்றிபெற்றுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 9) அகமதாபாத்தில் நடந்த மாலை நேர ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டனஸ் அணியும் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

முதலில் பந்தடித்த குஜராத் அணிக்கு தமிழக வீரர்கள் சாய் சுதர்‌‌ஷன் (53 ஓட்டங்கள்) மற்றும் விஜய் சங்கரின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில்4 விக்கெட் இழப்புக்கு 204 ஓட்டங்கள் எடுத்தது.

விஜய் சங்கர் 24 பந்தில் 63 ஓட்டங்கள் எடுத்தார்.

இலக்கை விரட்டிய கோல்கத்தா அணிக்கு வெங்கடே‌ஷ் ஐயரும் (83 ஓட்டங்கள்) நித்தி‌ஷ் ரானாவும் (45 ஓட்டங்கள்) சிறப்பாக விளையாடி அணியை வெற்றி நோக்கி நகர்த்தினர்.

இருப்பினும் ர‌ஷித் கான் 16 ஓவரில் ஹாட்ரிக் எடுக்க ஆட்டம் குஜராத் பக்கம் திரும்பியது.

கடைசி ஓவரில் 29 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்றிருக்க ரிங்கு சிங் தொடர்ந்து ஐந்து சிகசர்கள் அடித்து கோல்கத்தா அணியை வெற்றி பெறச் செய்தார்.

அதிரடியக ஆடிய ரிங்கு சிங் 21 பந்தில் 48 ஓட்டங்கள் எடுத்தார்.

குறிப்புச் சொற்கள்