கே எல் ராகுல் உலக டெஸ்ட் சாம்பியன்‌ஷிப் இறுதியாட்டத்தில் இருந்து விலகல்

கே எல் ராகுல் உலக டெஸ்ட் சாம்பியன்‌ஷிப் இறுதியாட்டத்தில் இருந்து விலகல்

1 mins read
c73ce1e8-c2f4-4487-8a58-1e77751d38ef
படம்: ஐபிஎல்/டுவிட்டர் -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான கே எல் ராகுல் காயம் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்‌ஷிப் இறுதியாட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாடும்போது ராகுலுக்கு தசைநார் கிழிந்தது. அதனால் அவருக்கு நடப்பதில் சிரமம் இருந்தது.

இப்பருவத்தில் எஞ்சியிருக்கும் ஐபிஎல் ஆட்டங்களிலும் ராகுல் கலந்துகொள்ளப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

காயத்தின் அளவு தீவிரமாக இருப்பதால் ஜூன் 7ம் தேதி லண்டன் ஓவல் விளையாட்டரங்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அவரால் கலந்துகொள்ள முடியாது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட முடியாமல் போவது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. மீண்டும் அணிக்கு திரும்புவது தான் எனது இலக்கு என்று ராகுல் சமூக ஊடகங்களில் தகவல் வெளியிட்டார்.

காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொள்ளப்போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்