தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டோனியின் சாதனையை கோஹ்லி முறியடித்தார்

1 mins read
318b1060-ddac-47b5-983c-2468d0f511e0
அணித் தலைவராக இருந்து சொந்த மண்ணில் அதிக வெற்றிகளை குவித்த பெருமை விராட் கோஹ்லியை சேர்கிறது. படம்:பிசிசிஐ -

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வென்றதையடுத்து, சொந்த மண்ணில் அதிக வெற்றிகளை பதிவு செய்த இந்திய அணித் தலைவர் என்ற சாதனையை விராட் கோஹ்லி பெற்றார்.

இந்தப் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

சொந்த மண்ணில் 29 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கிய கோஹ்லி 22 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றார்.

இதற்கு முன்பு டோனி இந்திய அணிக்குத் தலைமை ஏற்று சொந்த மண்ணில் 30 போட்டிகள் விளையாடி 21 போட்டிகள் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது டோனியின் சாதனையை கோஹ்லி முறியடித்துள்ளார்.