இந்திய பிரிமியர் லீக் எனும் ஐபிஎல் போட்டியில் ஆட்ட விதிமுறைகளை மீறியதற்காக பெங்களூர் அணியின் விராத் கோஹ்லிக்கும் லக்னோ அணியின் மதிவுறைஞர் கெளவுதம் கம்பீருக்கும் அவரின் சம்பளம் முழுவதும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
அதன் மூலம் கோஹ்லிக்கு கிட்டத்தட்ட ரூ 1.07 கோடி ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. கம்பீருக்கு கிட்டத்தட்ட 25 லட்சம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
லக்னோவுக்கு விளையாடும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த நவீன் உல் ஹாக்கிற்கு 1.79 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது அவரின் மொத்த சம்பளத்தில் 50 விழுக்காடு அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
மே-1ஆம் தேதி லக்னோவில் நடந்த இரவு நேர ஆட்டத்தில் பெங்களூரு அணியும் லக்னோ அணியும் மோதின.
அதில் பெங்களூரு அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ஆட்டத்தின் இடையிலேயே இரு அணி வீரர்களும் காரசாரமாக இருந்தனர்
ஆட்டம் முடிந்த பிறகு கோஹ்லிக்கும் கம்பீருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. விவாதம் மோசமடையாமல் இருக்க இருவரையும் அணி வீரர்கள் அமைதிப்படுத்தினர்.
விதிமுறை மீறியதை மூன்று வீரர்களும் ஒப்புக்கொண்டனர். அதைத் தொடர்ந்து அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.