தரவரிசையில் கோஹ்லி ஏறுமுகம்

1 mins read
620f05d2-622d-409e-937a-55193dfd2a7c
ஒருநாள் கிரிக்கெட் பந்தடிப்பாளர்களுக்கான தரவரிசையில் ஏழாமிடத்திற்கு முன்னேறினார் இந்தியாவின் விராத் கோஹ்லி. - படம்: இபிஏ

துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆட்டக்காரரான விராத் கோஹ்லி, ஒருநாள் போட்டிகளில் பந்தடிப்பாளர்களுக்கான தரவரிசையில் ஈரிடங்கள் முன்னேறி, ஏழாம் நிலைக்கு உயர்ந்துள்ளார்.

அண்மையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சென்னையில் நடந்த போட்டியில் அவர் 85 ஓட்டங்களைக் குவித்தது குறிப்பிடத்தக்கது.

அதே போட்டியில் ஆட்டமிழக்காமல் 97 ஓட்டங்களை எடுத்த இன்னோர் இந்திய வீரர் கே எல் ராகுல் 15 இடங்கள் முன்னேறி, 19ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். பாகிஸ்தானின் பாபர் ஆசம் முதல் இடத்தில் இருக்கிறார்.

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில், ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசல்வுட்டுடன் முதலிடத்தைப் பகிர்ந்து வந்த இந்திய வேகப் பந்துவீச்சாளர் முகம்மது சிராஜ், அண்மைய தரவரிசையில் இரண்டாம் இடத்திற்கு இறங்கினார். சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் எட்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஆல்ரவுண்டர் வரிசையில் பங்ளாதேஷ் அணித்தலைவர் ஷாகிப் அல் ஹசன் முதலிடத்தில் உள்ளார். இந்தியாவின் ஹார்திக் பாண்டியா ஏழாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்