தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எம்பாப்பேவை நிறுத்துவது இங்கிலாந்துக்கு எம்மாம் பெரிய சவால்

1 mins read
cd3c9af1-71aa-4367-b3f5-3a30212379bb
வேகமும் விவேகமும் உடைய கிலியோன் எம்பாப்பே. படம்: ஏஎஃப்பி -

உலகக் கிண்ணக் காலிறுதிச் சுற்றில் பிரான்சை எதிர்கொள்ளும் இங்கிலாந்து, ஒரு பெரிய சவாலைக் கடந்துவர வேண்டும்.

அசுர வேகத்தில் ஓடும் கிலியோன் எம்பாப்பேவை கோல் போடவிடாமல் தடுப்பதே அந்தச் சவால்.

இம்முறை நடைபெறும் உலகக் கிண்ணப் போட்டியில் அசத்தலான ஆட்டத்திறனை வெளிப்படுத்தியுள்ளார் எம்பாப்பே. நான்கே ஆட்டங்களில் ஐந்து கோல்களைப் போட்டுள்ளார் இவர்.

அதுவும், காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றில் போலந்துக்கு எதிராக அற்புதமாக இரு கோல்களை இவர் போட்டார்.

ஃபிஃபாவை பொறுத்தவரை, போலந்து உடனான ஆட்டத்தில் மணிக்கு 35.3 கிலோமீட்டர் வேகத்தை எம்பாப்பே எட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலகக் கிண்ணப் போட்டியின்போது பதிவு செய்யப்பட்ட ஆக வேகமான ஓட்டத்தில் இதுவும் ஒன்று.

23 வயது எம்பாப்பேயின் வேகத்திற்கு ஈடுகொடுக்க இங்கிலாந்திடம் பதில் இருக்கலாம். காற்பந்து விளையாட்டில் வேகமான தற்காப்பு ஆட்டக்காரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார் கைல் வாக்கர்.

எம்பாப்பேவை கட்டுப்படுத்தும் பொறுப்பு 32 வயது வாக்கரிடம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.