தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'கவலைப்படாதே சகோதரா': எம்பாப்பேயின் டுவிட்டர் பதிவு வேகமாகப் பரவியது

1 mins read
5637d6a2-9a77-4d7b-90e4-73a4abcac6e2
மொரோக்கோவின் அஷ்ரஃப் ஹக்கிமிக்கு ஆறுதல் கூறும் பிரான்சின் கிலியோன் எம்பாப்பே. படம்: இபிஏ -

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் மொரோக்கோவின் வெற்றியை பிரான்ஸ் நட்சத்திர வீரர் கிலியோன் எம்பாப்பே கொண்டாடிலும், தம்முடைய நண்பரும் பிஎஸ்ஜி குழுவின் சக ஆட்டக்காரருமான அஷ்ரஃப் ஹக்கிமிக்கு ஆறுதல் கூறத் தவறவில்லை.

உலகக் கிண்ணப் போட்டியில் மொரோக்கோவின் எழுச்சிக்கு ஹக்கிமி முக்கியப் பங்காற்றியுள்ளார்.

ஆட்ட முடிவில் கட்டி அணைத்துக்கொண்ட எம்பாப்பேயும் ஹக்கிமியும், தங்கள் அணி சீருடைகளைப் பரிமாறிக்கொண்டனர்.

பின்னர் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்ட எம்பாப்பே, உலகக் கிண்ணப் போட்டியில் வரலாறு படைத்ததற்காக ஹக்கிமியை பாராட்டினார்.

"கவலைப்படாதே சகோதரா, நீங்கள் செய்தவற்றை எண்ணி அனைவரும் பெருமை கொள்கின்றனர். நீங்கள் வரலாறு படைத்திருக்கிறீர்கள்," என்றார் எம்பாப்பே.