தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டோர்ட்மண்ட்டை வீழ்த்திய லெவகுசன்

1 mins read
c9db927a-0bfa-46cd-bcc0-93e2e3c425cb
லெவகுசனுக்காக பெட்ரிக் ஷிக் (வலது) இரண்டு கோல்களைப் போட்டார். - படம்: ராய்ட்டர்ஸ்

டோர்ட்மண்ட்: ஜெர்மானியக் காற்பந்து லீக் போட்டி ஆட்டத்தில் பொருசியா டோர்ட்மண்ட் குழுவை நடப்பு வெற்றியாளரான பயர் லெவகுசன் 3-2 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது.

இந்த ஆட்டம் டோர்ட்மண்ட் குழுவின் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 10) நடைபெற்றது.

லெவகுசனுக்காக பெட்ரிக் ஷிக் இரண்டு கோல்களைப் போட்டார்.

இந்த வெற்றியின் மூலம் லீக் பட்டியலில் முன்னிலை வகிக்கும் பயர்ன் மியூனிக்கை லெவகுசன் நெருங்கியுள்ளது.

மியூனிக், 36 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

35 புள்ளிகளுடன் லெவகுசன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

ஆனால், மியூனிக்கைவிட லெவகுசன் கூடுதலாக ஓர் ஆட்டத்தில் களமிறங்கியுள்ளது.

ஆட்டம் தொடங்கிய 25 வினாடிகளிலேயே லெவகுசன் கோல் போட்டு முன்னிலை வகித்து டோர்ட்மண்ட்டை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

தொடர்புடைய செய்திகள்

ஆட்டத்தின் 8வது நிமிடத்தில் லெவகுசன் அதன் இரண்டாவது கோலைப் போட்டது.

நான்கு நிமிடங்கள் கழித்து டோர்ட்மண்ட் ஒரு கோல் போட்டது.

ஆனால் 19வது நிமிடத்தில் லெவகுசன் அதன் மூன்றாவது கோலைப் போட்டது.

79வது நிமிடத்தில் டோர்ட்மண்ட் குழுவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

அதன்மூலம் அக்குழு தனது இரண்டாவது கோலைப் போட்டது.

லெவகுசனுக்காக இரண்டு கோல்களைப் போட்ட பெட்ரிக் ஷிக் இப்பருவத்தில் இதுவரை 11 கோல்களைப் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்