தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

1 mins read
eb292372-d697-40ce-be31-0de2d4447aec
டெண்டுல்கர் 20 ஆண்டுகளுக்கு மேலாக அனைத்துலக கிரிக்கெட்டில் விளையாடி உள்ளார்.  - படம்: ஊடகம்

டெல்லி: மும்பையில் நடைபெற்ற இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு விருது வழங்கும் விழாவில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு ‘கர்னல் சி.கே. நாயுடு’ வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்தியாவின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவரான சி.கே. நாயுடு நினைவாக 1994-இல் நிறுவப்பட்ட வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்ற 31வது வீரர் டெண்டுல்கர்.

1989 ஆம் ஆண்டு, தனது 16 வயதில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அறிமுகமான டெண்டுல்கர், 20 ஆண்டுகளுக்கு மேலாக அனைத்துலக கிரிக்கெட்டில் விளையாடி உள்ளார். 

ஆண்கள் பிரிவில் 2023-24 ஆம் ஆண்டிற்கான சிறந்த அனைத்துலக கிரிக்கெட் வீரர் ‘பாலி உம்ரிகர்’ விருதை ஜஸ்பிரித் பும்ராவும், பெண்கள் பிரிவில் ஸ்மிருதி மந்தனாவும் வென்றனர்.

குறிப்புச் சொற்கள்