தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலகக் கிண்ணம்: மெஸ்ஸிக்கு 'அரபு' கௌரவம்

1 mins read
5fa36892-4249-49aa-ab27-eb107f22d185
வெற்றிக் கிண்ணத்தைப் பெற மேடைக்கு வந்த லயனல் மெஸ்ஸிக்கு 'பிஸ்த்' எனும் தனிச்சிறப்பு வாய்ந்த அங்கி அணிவிக்கப்பட்டது. படம்: ராய்ட்டர்ஸ் -

வெற்றிக் கிண்ணத்தைப் பெற மேடைக்கு வந்த லயனல் மெஸ்ஸிக்கு 'பிஸ்த்' எனும் தனிச்சிறப்பு வாய்ந்த அங்கி அணிவிக்கப்பட்டது.

தங்கம் இழையோடும் இந்தக் கருநிற ஆடை மன்னர்கள், இமாம்கள், எமிர்கள் போன்ற பெருமதிப்பிற்குரியோருக்கே அணிவிக்கப்படும். ஆயினும், மெஸ்ஸிக்கும் அவரது அணியின் சாதனைக்கும் மதிப்பளிக்கும் வகையில் அவ்வங்கியை அணிவித்து மத்திய கிழக்கு நாடான கத்தார் சிறப்பித்தது.