மனம் மாறிய மெஸ்ஸி

மனம் மாறிய மெஸ்ஸி

1 mins read
4128849b-df69-4f63-bd18-04d3478d7cf4
படம்: ராய்ட்டர்ஸ் -

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியில் விளையாட விருப்பும் தெரிவித்துள்ளார் அர்ஜென்டினாவின் லயனல் மெஸ்ஸி. சென்ற போட்டியில் தனது அணிக்கு வெற்றி கோப்பையை தட்டிச்சென்ற மெஸ்ஸி அதுவே தனறு இறுதி உலகக் கிண்ணப் போட்டியாக இருக்கும் என்று முன்னதாகக் கூறியிருந்தார்.

வயது காரணத்தினால் அடுத்த உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவது சிரமமாக இருக்கும் என 35 வயதான மெஸ்ஸி குறிப்பிட்டிருந்தார். ஆனால் இப்போது அவருடைய மனம் மாறியிருப்பதாகத் தெரிகிறது.

"உடல் ஆரோக்கியமாக இருக்கும்வரை காற்பந்து விளையாடுவது என்னுடைய குறிகோள். ஆனால் அடுத்த உலகக் கிண்ணப் போட்டிக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளன," என கூறியுள்ளார் மெஸ்ஸி.

அடுத்த உலகக் கிண்ணப் போட்டியில் மெஸ்ஸி விளையாடுவார் என அர்ஜென்டினா அணியின் காற்பந்து பயிற்றுவிப்பாளர் நம்புகிறார்.

ஐந்து உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடி உள்ள ஆறு காற்பந்து வீரர்களில் மெஸ்ஸியும் ஒருவர்.

கத்தாரில் நடந்த போட்டியில் மெஸ்ஸி மொத்தம் ஏழு கோல்களை புகுத்தினார்.