தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லிவர்பூல்-ஆர்சனல் சமநிலை

1 mins read
6014133b-055a-42c2-b8bf-cba7f639af20
கோல் போட்டுக் கொண்டாடிய லிவர்பூலின் முகம்மது சாலா (வலது). - படம்: இபிஏ

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி ஆட்டத்தில் ஆர்சனலும் லிவர்பூலும் தரப்புக்கு இரண்டு கோல்கள் போட்டு சமநிலை கண்டன.

இந்த ஆட்டம் அக்டோபர் 27ஆம் தேதியன்று ஆர்சனலின் எமிரேட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்றது.

ஆர்சனலின் முதல் கோலை புக்காயோ சாக்கா போட்டார்.

இதையடுத்து, லிவர்பூலின் வெர்ஜில் வேன் டைக் தலையால் முட்டிய பந்து வலையைத் தொட்டது.

ஆனால் இடைவேளைக்கு முன்பு ஆர்சனல் கோல் போட்டு மீண்டும் முன்னிலை வகித்தது.

இம்முறை மிக்கேல் மெரினோ கோல் போட்டார்.

பிற்பாதி ஆட்டத்தில் லிவர்பூலுக்காக அதன் நட்சத்திர ஆட்டக்காரர் முகம்மது சாலா கோல் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்தார்.

குறிப்புச் சொற்கள்