தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஸ்பர்சை வீழ்த்திய லிவர்பூல்

1 mins read
53da01de-880c-4c17-959a-fa047d2bd6b0
லிவர்பூலுக்காக முகம்மது சாலா இரண்டு கோல்களைப் போட்டார். - படம்: ஏஎஃப்பி

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் ஸ்பர்ஸ் குழுவை 6-3 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் தோற்கடித்தது.

இந்த ஆட்டம் டிசம்பர் 22ஆம் தேதியன்று நடைபெற்றது.

லிவர்பூலின் முகம்மது சாலாவும் லுயிஸ் டியாசும் தலா இரு கோல்களைப் போட்டனர்.

இந்த வெற்றியின் மூலம் லிவர்பூல் 39 புள்ளிகளுடன் லீக் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.

“எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. தொடர்ந்து முனைப்புடன் செயல்படுவேன்,” என்று லிவர்பூலுக்காக இதுவரை 229 கோல்களைப் போட்ட சாலா கூறினார்.

தோல்வியின் பிடியில் சிக்கிய ஸ்பர்ஸ் குழு, லீக் பட்டியலில் 23 புள்ளிகளுடன் 11வது இடத்தில் உள்ளது.

மற்றோர் ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட்டை போர்ன்மத் 3-0 எனும் கோல் கணக்கில் தோற்கடித்தது.

மிகுந்த ஏமாற்றம் அடைந்த யுனைடெட் ரசிகர்கள், ஆட்டம் முடிவதற்கு முன்பே விளையாட்டரங்கிலிருந்து வெளியேறத் தொடங்கினர்.

செல்சிக்கும் எவர்ட்டனுக்கும் இடையிலான ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிந்தது.

குறிப்புச் சொற்கள்