மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டியை 2-0 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் வீழ்த்தியது.
இந்த ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) சிட்டியின் விளையாட்டரங்கில் நடைபெற்றது.
லிவர்பூலின் முதல் கோலை அதன் நட்சத்திர ஆட்டக்காரர் முகம்மது சாலா போட்டார்.
லிவர்பூலின் இரண்டாவது கோலுக்கும் சாலா முக்கிய காரணமாக இருந்தார்.
அவர் அனுப்பிய பந்தை டோமினிக் ஸொபோஸ்லாய் வலைக்குள் அனுப்பினார்.
இந்த வெற்றியின் மூலம் லீக் பட்டியலில் லிவர்பூல் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
27 ஆட்டங்கள் விளையாடிய நிலையில், 64 புள்ளிகள் பெற்று அது முதல் இடத்தில் உள்ளது.
இரண்டாவது இடத்தில் இருக்கும் ஆர்சனலைவிட லிவர்பூல் கூடுதலாக 11 புள்ளிகள் பெற்றுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மான்செஸ்டர் சிட்டி 44 புள்ளிகளுடன் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
மற்றோர் ஆட்டத்தில் நாட்டிங்ஹம் ஃபாரஸ்ட் குழுவை 4-3 எனும் கோல் கணக்கில் நியூகாசல் யுனைடெட் தோற்கடித்தது.

