லண்டன்: லீக் கிண்ணத்தின் நடப்பு வெற்றியாளரான லிவர்பூல் அணி இப்பருவத்திற்கான இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளது.
அரையிறுதி ஆட்டத்தின் இரண்டாம் சுற்றில் லிவர்பூல் அணி ஸ்பர்ஸ் குழுவை 4-0 என்று பந்தாடியது.
தொடக்கம் முதலே அதிரடி காட்டிய லிவர்பூல் 34வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தது.
ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் வேகத்தை அதிகரித்த லிவர்பூல் 51, 75, 80 ஆகிய நிமிடங்களில் கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தது.
அரையிறுதி ஆட்டத்தின் முதல் சுற்றில் லிவர்பூல் அணியை 1-0 என்று வீழ்த்திய ஸ்பர்ஸ் இரண்டாம் சுற்றில் செய்வது அறியாது திகைத்து நின்றது.
லிவர்பூல் அணி மார்ச் 17ஆம் தேதி நடக்கும் இறுதியாட்டத்தில் நியூகாசல் அணியை எதிர்கொள்கிறது. ஆட்டம் வெம்பிலி விளையாட்டரங்கத்தில் நடைபெறும்.

