மட்ரிட்: லிவர்பூலின் நட்சத்திர ஆட்டக்காரர் டியோகோ ஜோட்டா சாலை விபத்தில் மாண்டார். கார் விபத்து வியாழக்கிழமை (ஜூலை 3) ஸ்பெயினின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஸமோராவில் நிகழ்ந்தது.
விபத்தில் 28 வயது ஜோட்டாவும் அவரது சகோதரர் ஆண்ட்ரே சில்வாவும் மாண்டனர்.
போர்ச்சுகீசியரான ஜோட்டா கடந்த ஐந்து ஆண்டுகளாக லிவர்பூலுக்காக விளையாடி வந்துள்ளார்.. கடந்த பருவத்தில் இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியை லிவர்பூல் வென்றது.
அந்தக் குழுவில் ஜோட்டா இடம்பெற்றார். அவரது சகோதரரான 26 வயது ஆண்ட்ரே போர்ச்சுகலின் இரண்டாம் நிலை காற்பந்து லீக் போட்டியில் போட்டியிடும் எஃப்சி ஃபெனஃபியேலுக்கு விளையாடினார்.
ஜோட்டாவின் மரணம் தன்னை மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளதாக லிவர்பூல் காற்பந்துக் குழு அறிக்கை வெளியிட்டது.
ஜோட்டாவின் குடும்பத்தாருக்குத் தேவையான ஆதரவு வழங்கப்படும் என்று அது கூறியது.