லாஸ் ஏஞ்சலிஸ் ஒலிம்பிக்: முதல் கட்ட வெளியீட்டில் 4 மில்லியன் நுழைவுச்சீட்டுகள் விற்பனை

லாஸ் ஏஞ்சலிஸ் ஒலிம்பிக்: முதல் கட்ட வெளியீட்டில் 4 மில்லியன் நுழைவுச்சீட்டுகள் விற்பனை

2 mins read
0e60d9a2-ff31-40db-8f71-c0e829c0832f
எல்ஏ28 அமைப்பாளர்கள், தங்களது இரண்டாவது நுழைவுச்சீட்டுக் குலுக்கலுக்கான பதிவு Tickets.LA28.org என்ற இணையத்தளத்தில் தொடங்கியுள்ளதாகவும் இதற்கான விற்பனை ஆகஸ்ட் 2026ல் தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்தனர். அடுத்த கட்ட விற்பனையில் அனைத்து ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கும் பல்வேறு விலைகளில் புதிய நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படும் என்று ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளின் ஏற்பாட்டாளர்கள், இம்மாதம் நடந்த முதல் வெளியீட்டில் நான்கு மில்லியனுக்கும் அதிகமான நுழைவுச்சீட்டுகளை விற்றுள்ளதாக வியாழக்கிழமை (ஏப்ரல் 23) தெரிவித்தனர். இது தொடக்க விழாவுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் நிலையில், கோடைக்கால விளையாட்டுப் போட்டிகளுக்கான வலுவான தேவையின் ஆரம்ப அறிகுறியாகும்.

எல்ஏ28 அமைப்பாளர்கள், தங்களது இரண்டாவது நுழைவுச்சீட்டுக் குலுக்கலுக்கான பதிவு Tickets.LA28.org என்ற இணையத்தளத்தில் தொடங்கியுள்ளதாகவும் இதற்கான விற்பனை ஆகஸ்ட் 2026ல் தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்தனர். அடுத்த கட்ட விற்பனையில் அனைத்து ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கும் பல்வேறு விலைகளில் புதிய நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படும் என்று ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

“எங்கள் தொடக்க விற்பனைக்குக் கிடைத்த வரவேற்பு ஒரு வரலாற்றுச் சாதனைக்குக் குறைவானதல்ல,” என்று எல்ஏ28ன் தலைமைச் செயல் அதிகாரி ரெனோல்ட் ஹூவர் தெரிவித்தார்.

லாஸ் ஏஞ்சலிஸ் மற்றும் ஓக்லஹோமா நகரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கான முன்பதிவு விற்பனையின்போது, 100 அமெரிக்க டாலருக்கும் குறைவான விலையுள்ள நுழைவுச்சீட்டுகளில் 95% விற்கப்பட்டதாகவும் 28 அமெரிக்க டாலர் பெறுமானமுள்ள ஏறத்தாழ 500,000 நுழைவுச்சீட்டுகளை உள்ளூர் மக்கள் வாங்கியுள்ளதாகவும் எல்ஏ28 அமைப்பு கூறியது.

இருப்பினும், முன்பதிவு விற்பனையின்போது நுழைவுச்சீட்டுகளின் அதிக விலை, கட்டணங்கள் மற்றும் குறைந்த அளவிலான இருப்பு குறித்து குடியிருப்பாளர்கள் சிலர் புகார் அளித்துள்ளனர்.

85 நாடுகளிலும் அமெரிக்காவின் அனைத்து 50 மாநிலங்கள் மற்றும் பகுதிகளிலும் நுழைவுச்சீட்டுகள் விற்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இதில் பிரிட்டன், கனடா, மெக்சிகோ, ஜப்பான் ஆகியவை முன்னணி அனைத்துலகச் சந்தைகளில் அடங்கும்.

முதல் கட்ட வெளியீட்டில் ஆடவர் பிரிவைவிட மகளிர் ஒலிம்பிக் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டுகள் அதிக அளவில் விற்கப்பட்டதாகவும் ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் எனும் சீருடற்பயிற்சி நுழைவுச்சீட்டுகள் மிக வேகமாக விற்கப்பட்டதாகவும் ஏற்பாட்டுக் குழு கூறியது. மேலும், நாடு முழுவதும் உள்ள ஏழு விளையாட்டரங்கங்களில் நடைபெறும் காற்பந்து ஆட்டங்களுக்காக வெளியிடப்பட்ட ஏறக்குறைய அனைத்து நுழைவுச்சீட்டுகளும் விற்கப்பட்டுவிட்டதாகவும் அது தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்