வரலாற்றில் பதிவான கடும் தோல்வி

ஐரோப்பிய காற்பந்து ஜாம்பவான்களான ஜெர்மனி காற்பந்து குழு நேற்று எதிர்பாராத விதத்தில் படும் தோல்வி கண்டது.

சிங்கப்பூர் நேரப்படி இன்று அதிகாலை நடந்த ஐரோப்பிய நே‌‌ஷன்ஸ் லீக் காற்பந்து போட்டியின் 'குருப்' பிரிவு ஆட்டங்களில் அது ஸ்பேன் குழுவுடன் மோதியது.

ஆட்டத்தின் 17வது நிமிடத்திலிருந்தே ஜெர்மனியின் தற்காப்பு கவிழ்ந்தது, கோல் மழை பொழியத் தொடங்கியது.

ஸ்பேனின் தாக்குதல் ஆட்டக்காரர் அல்வாரோ மொராத்தா பெனால்ட்டி எல்லையிலிருந்து பந்தை தலையால் முட்டி தம் குழுவுக்கு முன்னணியை தேடித் தந்தார்.

அதனைத் தொடர்ந்து ஸ்பேன் குழுவில் இடம்பெறும் மான்செஸ்டர் சிட்டி நட்சத்திரங்களான தோரேஸ் மற்றும் ரொட்ரி கோல் நிலவரத்தை 3-0 என ஆக்கினர்.

இரண்டாம் பாதியில், சேதம் தொடர்ந்தது.

இன்னும் மூன்று கோல்களை ஸ்பேன் புகுத்தி 6-0 என்ற மாபெரும் கோல் கணக்கில் அது ஜெர்மனியை வென்றது.

ஜெர்மனி காற்பந்து குழுவின் சரித்திரத்தில் இது மறக்கப்பட வேண்டிய நாள் ஏனெனில் இதே கோல் கணக்கில் அது 1931ஆம் ஆண்டில் ஆஸ்திரியா குழுவுடன் பொருதும்போது தோல்வி கண்டது.

இந்த வெற்றியுடன் போட்டியின் 'குருப்' 4 பட்டியலில் 11 புள்ளிகளுடன் முதலிடம் வகித்து போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறுகிறது ஸ்பேன்.

போட்டியின் மற்ற ஆட்டங்களில், போர்ஜுகல் அணி 3-2 என்ற கோல் கணக்கில் குரோஷியா குழுவை வென்றது.

பிரான்ஸ் அணி சுவீடன் அணியை 4-2 என வீழ்த்தியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!