பிரட்டிஸ்லாவாவைப் பந்தாடிய மேன்சிட்டி

1 mins read
6730960b-0be5-4438-91ba-482d723f54ec
மான்செஸ்டர் சிட்டியின் மூன்றாவது கோலைப் போட்ட எர்லிங் ஹாலண்ட். - படம்: ஏஎஃப்பி

பிரடிஸ்லாவா: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டிப் பயணத்தை மான்செஸ்டர் சிட்டி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. ஸ்லோவாக்கியாவின் சிலோவான் பிரட்டிஸ்லாவாவை சிட்டி 4-0 எனும் கோல் கணக்கில் பந்தாடியது.

எதிரணியின் விளையாட்டரங்கில் விளையாடியபோதும் சிட்டி கோல் மழை பொழிந்தது.

ஆட்டம் தொடங்கிய முதல் 15 நிமிடங்களில் இல்கே குண்டோவன், ஃபில் ஃபோடன் ஆகியோர் கோல் போட்டனர்.

சிட்டியின் மூன்றாவது கோலை அதன் நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட் போட்டார்.

இதுவே சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ஹாலண்ட் போட்ட 42வது கோல். சிட்டியின் ஜேம்ஸ் மெக்அட்டீ முதல்முறையாக சாம்பியன்ஸ் லீக் போட்டியில் சிட்டிக்காக கோல் போட்டார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்