மான்செஸ்டர்: ஜனவரி 11ஆம் தேதியன்று. பிரைட்டனுக்கு எதிரான எஃப்ஏ கிண்ண தோல்வியை அடுத்து, மான்செஸ்டர் யுனைடெட்டின் ‘பலவீனமான’ வீரர்கள் தங்கள் நம்பிக்கையை இழந்துவிட்டதாக அக்குழுவின் இடைக்கால நிர்வாகி டேரன் ஃபிளட்சர் ஒப்புக்கொண்டார்.
நிர்வாகி இல்லாமல், 1981-82க்குப் பிறகு முதல் முறையாக இரண்டு உள்ளூர் காற்பந்துக் கிண்ணப் போட்டிகளிலிருந்தும் வெளியேறி, பிரிமியர் லீக்கில் ஏழாவது இடத்தில் ஏமாற்றமளிக்கும் வகையில் அமர்ந்திருக்கும் யுனைடெட், அதன் வரலாற்றில் அரிதாகவே கீழ்நோக்கிய நிலையை அடைந்துள்ளது.
மூன்றாவது சுற்றில் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது யுனைடெட்டின் கிண்ணம் வெல்லும் நம்பிக்கையை முடிவுக்குக் கொண்டுவந்தபோது, இறுதி விசில் நடுவரால் ஊதப்பட்டபோது, விளையாட்டரங்கமே கிட்டத்தட்ட அமைதிநிலைக்கு வந்தது. அதே நேரத்தில் வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறும்போது சில கூச்சல்களும் எழுந்தன.
ஆனால் பிரிமியர் லீக்கில், பெர்ன்லிக்கு எதிரான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்த பிறகு, முன்னாள் யுனைடெட் வீரர் டேனி வெல்பெக், பிரைச்சனின் இரண்டாவது கோலை அடித்தபோது, ஓல்ட் டிராஃபோர்டில் ஊக்கத்தை அளிக்கும் ஃபிளட்சரின் நம்பிக்கை தவுடு பொடியாகியது.
“நமது ஆட்டம் ஏற்ற இறக்கமாக இருந்தது. நாங்கள் நன்றாகத்தான் தொடங்கினோம். ஆனால் எங்களுக்கு எதிரான முதலாவது கோல் எங்கள் வேகத்தைத் தகர்த்தது,” என்று ஃபிளட்சர் கூறினார். “பந்தை அனுப்புதல் மிகவும் மெதுவாக இருந்தது. அதனால் நான் இடைவேளை நேரத்தில் அவர்களுக்கு சவால் விட்டேன். இது இந்த வாரத்தில் நடந்த ஆட்டத்தைப் போலவே இருந்தது. நாங்கள் பந்தை அதிக வேகத்தில் நகர்த்த வேண்டியிருந்தது,” என்றும் அவர் சொன்னார்.
2014ஆம் ஆண்டுக்குப் பிறகு யுனைடெட்டின் முதல், எஃப்ஏ கிண்ணப் போட்டியில் மூன்றாவது சுற்றில் தோல்வியடைந்தது, தற்போது மேன்யூ சங்கத்தைச் சூழ்ந்துள்ள சிக்கல்களின் பட்டியலை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
பிரைட்டனுக்கு எதிரான ஆட்டத்தின்போது மேன்யூவின் இணை உரிமையாளர்களான ஜிம் ராட்க்ளிஃப், கிளேசர் குடும்பத்திற்கு எதிராக கோஷமிடுவதன் மூலம் யுனைடெட் ஆதரவாளர்கள் தங்கள் அணியின் குழப்பமான நிலை குறித்த தங்கள் தீர்ப்பை வெளிப்படையாகத் தெரிவித்தனர்.

