மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழு 11 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் முழுப்பருவ நுழைவுச்சீட்டுகளின் விலையை உயர்த்தி இருக்கிறது.
அடுத்த ஆண்டு பெரியவர்களுக்கான முழுப்பருவ நுழைவுச்சீட்டின் விலை 5 விழுக்காடு அதிகரிக்கும்.
ஆட்டங்களை நடத்துவதற்கான செலவுகள் கடந்த 5 ஆண்டுகளில் 40 விழுக்காடு உயர்ந்துவிட்டதாகவும் கடைசி 12 மாதங்களில் மட்டும் செலவுகள் 11 விழுக்காடு கூடியதால் இம்முடிவை எடுத்துள்ளதாகவும் அக்குழு தெரிவித்தது.
16 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கான முழுப்பருவ நுழைவுச்சீட்டின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
அதேபோல், 65 வயதும் அதற்கு மேற்பட்டவர்களுக்குமான முழுப்பருவ நுழைவுச்சீட்டுக்கு 50 விழுக்காடு சலுகை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மான்செஸ்டர் யுனைடெட் குழுவை விற்க அதன் உரிமையாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.
அக்குழுவை வாங்க பெருஞ்செல்வந்தர்கள் பலர் போட்டியிட்டு வருகின்றனர்.

