ஹோய்லாண்ட் - ரேஷ்ஃபர்ட் இணை மின்னும்: யுனைடெட் நிர்வாகி நம்பிக்கை

ஹோய்லாண்ட் - ரேஷ்ஃபர்ட் இணை மின்னும்: யுனைடெட் நிர்வாகி நம்பிக்கை

1 mins read
a801b03e-3d49-441c-93ed-077d51b64245
ஸ்பர்ஸ் குழுவிற்கெதிரான பிரிமியர் லீக் ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் இரண்டாவது கோலை அடித்த மார்கஸ் ரேஷ்ஃபர்ட் (இடது). அவருடன் சேர்ந்து அம்மகிழ்ச்சியைக் கொண்டாட விரையும் ராஸ்முஸ் ஹோய்லாண்ட். - படம்: ராய்ட்டர்ஸ்

மான்செஸ்டர்: தாக்குதல் ஆட்டக்காரர்களான ராஸ்முஸ் ஹோய்லாண்டும் மார்க்கஸ் ரேஷ்ஃபர்டும் அபாயகரமான இணையாகத் திகழ முடியும் என்று மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழு நிர்வாகி எரிக் டென் ஹாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

யுனைடெட்டின் ஓல்டு டிராஃபர்ட் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 14) பின்னிரவு யுனைடெட் - டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுக்கள் மோதிய பிரிமியர் லீக் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

யுனைடெட் சார்பில் ஹோய்லாண்டும் ரேஷ்ஃபர்டும் ஆளுக்கு ஒரு கோல் அடித்தனர்.

நடப்புப் பருவத்தில் ஹோய்லாண்ட் இரு கோல்களையும் ரேஷ்ஃபர்ட் நான்கு கோல்களையும் மட்டுமே அடித்துள்ளனர்.

ஆயினும், இருவருக்கும் இடையில் நல்ல புரிதல் ஏற்படத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.

இதனையடுத்து, “இந்த முன்னேற்றம் மேலும் மேம்படும் என நம்புகிறேன்,” என்று தெரிவித்துள்ளார் டென் ஹாக்.

அடுத்ததாக, யுனைடெட் இம்மாதம் 28ஆம் தேதி நடக்கவுள்ள எஃப்ஏ கிண்ண நான்காம் சுற்று ஆட்டத்தில் நியூபோர்ட் கவுன்டி அல்லது ஈஸ்ட்லி குழுவை எதிர்த்தாடும்.

குறிப்புச் சொற்கள்