தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோல் ஏதுமின்றி சமநிலை கண்ட சிட்டி, இன்டர்

1 mins read
0a624b19-ca62-489d-9095-7972e90dad06
சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்கிய சிட்டிக்கு இந்தச் சமநிலை ஏமாற்றத்தை அளித்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

மான்செஸ்டர்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்தாட்டத்தில் இங்கிலாந்தின் மான்செஸ்டர் சிட்டியும் இத்தாலியின் இன்டர் மிலானும் கோல் ஏதுமின்றி சமநிலை கண்டன.

இந்த ஆட்டம் சிட்டியின் விளையாட்டரங்கில் செப்டம்பர் 18ஆம் தேதியன்று நடைபெற்றது.

சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்கிய சிட்டிக்கு இந்தச் சமநிலை ஏமாற்றத்தை அளித்துள்ளது.

செப்டம்பர் 22ஆம் தேதியன்று இங்கிலிஷ் பிரிமியர் லீக் போட்டியில் ஆர்சனலுடன் சிட்டி மோதுகிறது.

இதற்கிடையே, இன்டருக்கு எதிரான ஆட்டத்தில் சிட்டியின் நட்சத்திர வீரர் கெவின் டி பிராய்னவுக்குக் காயம் ஏற்பட்டது.

ஆர்சனலுக்கு எதிரான ஆட்டத்துக்குள் அவர் குணமடைந்துவிடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்