நான்கு போட்டிகளிலும் இடம்பெறும் மான்செஸ்டர் சிட்டி

கடந்த காற்பந்து பருவம் மான்செஸ்டர் சிட்டி குழுவுக்கு ஏமாற்றம் தந்தாலும் இம்முறை பழைய வலுமை நிலைக்கு திரும்பியுள்ளது மான்செஸ்டர் சிட்டி.

அது இன்று காலை (மார்ச் 17ஆம் தேதி) நடந்த சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மானிய பொருசியா மொன்சன்கிளட்பார்க் குழுவை வென்று போட்டியின் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

இந்த வெள்ளிக்கிழமை அடுத்ததாக அப்போட்டியில் அது எந்த குழுவுடன் பொருதும் என்ற விவரம் தெரிந்துவிடும்.

கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது குறித்து சிட்டி கொண்டாடினாலும் சாம்யன்ஸ் லீக் போட்டியில் அது கவனம் செலுத்தப் போவதில்லை என்று அதன் நிர்வாகி பெப் கார்டியோலா தெரிவித்துள்ளார்.

இப்பருவத்தில் மான்செஸ்டர் சிட்டி இங்கிலி‌‌ஷ் பிரிமியர் லீக், லீக் கிண்ணம், ஃப்ஏ கிண்ணம், சாம்பியன்ஸ் லீக் என நான்கு போட்டிகளில் தொடர்ந்து இடம்பெறுகிறது.
மாற்று ஆட்டக்காரர்களை அவ்வப்போது பயன்படுத்தியதால் எல்லா போட்டிகளிலும் நிலைத்திருப்பது சாத்தியமானது என்று கார்டியோலா தெரிவித்தார்.

"தற்போது குழுவில் 20 விளையாட்டாளர்கள் இடம்பெறுகின்றனர். எல்லாரும் காயமின்றி ஆரோக்கியமாக உள்ளதால், ஒவ்வொரு ஆட்டத்திலும் 6லிருந்து 7 ஆட்டக்காரர்கள் வரையில் மாற்றிக் கொள்ள முடிகிறது," என்று கூறினார் கார்டியோலா.

அடுத்ததாக வரும் சனிக்கிழமை இங்கிலி‌ஷ் ஃப்ஏ கிண்ண கால் இறுதி காற்பந்து போட்டியில் அது எவர்ட்டன் குழுவை சந்திக்க உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!