இறுதி ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி

இறுதி ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி

1 mins read
ad8b3fcb-25f6-4773-b1f9-fcea7db2ca58
மான்செஸ்டர் சிட்டியின் இரண்டாவது கோலைப் போட்ட உமர் மார்மோஷ் (வலது). - படம்: ராய்ட்டர்ஸ்

மான்செஸ்டர்: இங்கிலிஷ் லீக் கிண்ண காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு மான்செஸ்டர் சிட்டி தகுதி பெற்றுள்ளது.

அரையிறுதிச் சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் நியூகாசல் யுனைடெட்டை 3-1 எனும் கோல் கணக்கில் சிட்டி தோற்கடித்தது.

ஒட்டுமொத்த கோல் அடிப்படையில் 5-1 எனும் கோல் கணக்கில் சிட்டி வாகை சூடியது.

லீக் கிண்ண இறுதி ஆட்டத்தில் சிட்டியும் ஆர்சனலும் மோதும்.

2021ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக லீக் கிண்ண இறுதி ஆட்டத்துக்குச் சிட்டி தகுதி பெற்றுள்ளது.

இதற்கிடையே, தமது அணியினரின் செயல்பாடு குறித்து நியூகாசலின் நிர்வாகி எடி ஹாவ் ஏமாற்றம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்